என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 25, 2010

எல்லாமே... / மீட்சி / அது

1. எல்லாமே...

பாத்திரத்தை குலுக்கிக்
கேட்டான் பிச்சைக்காரன்
உடம்பை குலுக்கிக்
கதா பாத்திரம்
படைத்தாள் கவர்ச்சி நடிகை
வயிற்றுப் பசிக்கான ஓட்டத்தில்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>

2. மீட்சி

மீண்டும் வருவேன்
என்று சொல்லிவிட்டு
பதவியுடன் வந்தார்
ஊழல் மந்திரி .
மீண்டு வருவேன்
என்று சொல்லிவிட்டு
வராமல் போனது
மீனவன் வலையில்
அகப்பட்ட மீன்.


<> <> <> <> <> <> <> <> <> <> <>

3 . அது!

ஊரில் திருவிழா.
இருப்பவனுக்கு சொர்க்கம்
இல்லாதவனுக்கு நரகம்
கையில் பணம்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>

6 comments:

  1. மூன்று கவிதைகளுமே அருமை.
    மூன்றாவது யதார்த்தம்
    முதல் கவிதை லேசான நகைச்சுவை

    ReplyDelete
  2. வாங்கோ சார். ஊருக்கு வந்தாச்சா:). நல்லாருக்கு மூணும்.

    ReplyDelete
  3. மூன்று கவிதைகளும் மூன்று விதத்தில் அசத்துகின்றன!நல் வரவு!

    ReplyDelete
  4. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உங்கள் வலைப்பூவில் மூன்று முத்தான கவிதைகள். நல்லா வந்திருக்கு..

    வெங்கட்.

    ReplyDelete
  5. நீ..ண்ண்ண்.....ட... இடைவெளிக்குப் பிறகு,
    மூழ்கி எடுக்கப் பட்ட முத்துக்கள் மூன்று !!
    சூப்பர்...

    ReplyDelete
  6. திருவிழா பற்றிய கவிதையில் எதார்த்தத்தின் உணர்வுகள் கசிகிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "