என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, February 20, 2010

கலைத்துவிடு காவ்யா




வீடும் நர்ஸிங் ஹோமும் சேர்ந்தே கட்டப்பட்டிருந்த டாக்டர் நளினியின் நர்ஸிங் ஹோமுக்கு காவ்யா போய்ச் சேர்ந்தபோது அங்கு நாலைந்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

"உங்களுக்கு இது எத்தனாவது மாசம்?" என்று ஒருத்தி கேட்டாள், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம்.

"ரெண்டு மாசம் முடிஞ்சிடுச்சு. ஏற்கனவே ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்க. எங்கே இதுவும் பொட்டையா பிறந்திடப்போவுதேன்னு இதை கலைச்சிடனும்னு ஒத்தைக் காலில் நிக்கறாங்க மாமியாரும், நாத்தனாரும். அவங்க தொல்லை பொறுக்க முடியலை" என்றாள் அவள்.

"டாக்டர் வந்துட்டாங்க! டாக்டர் வந்துட்டாங்க!" கூட்டத்தில் யாரோ முணுமுணுத்தார்கள்.

வெளியில் ஒரு அவசர கேஸை பார்த்துவிட்டு, நர்சிங் ஹோமுக்குள் வரும்போதே, எல்லோரையும் தன் கண்களால் சர்வே செய்தவாறே வந்தாள் டாக்டர் நளினி.

காவ்யாவைப் பார்த்த மாத்திரத்தில் "அடடே வந்துட்டியா? வா,வா" என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் நளினி.

டாக்டர் நான் இங்கே வந்து இதை செஞ்சதைப் பத்தி என் வீட்டுக்காரருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் யார் மூலமாகவும் தெரியவே கூடாது. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. நமக்கு இருக்கற பணத்துக்கு எதுக்கு இப்படியெல்லாம் செய்யறே என்பார். நான்தான் மனசு கேட்காம வந்து இதை பண்றேன். அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள் நான் வீட்டுக்குப் போயிடணும்" என்று சொல்லிவிட்டு,

ஏற்கனவே பூஜை அறையில் போட்டிருந்த ரங்கோலி கோலத்தை கலைத்துவிட்டு டாக்டர் விரும்பியபடி, அந்த இடத்தில் புதிதாக ஐயப்பன் படத்தை ரங்கோலியில் போட ஆரம்பித்தாள் காவ்யா.

("சாவி" வார இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

சுதந்திரமாகச் சிந்தியுங்கள்! எண்ணப் பாய்ச்சலில் அண்ட வெளியில் பாய்ந்து பழகுங்கள்!

7 comments:

  1. ஒரு பக்கத்தில் அழகிய கோலமிட்டிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  2. எழுத்து மனதில் வடித்த கோலத்தைக் கலைக்க விருப்பமில்லை!

    ReplyDelete
  3. ரங்கோலி என் மனதிலும் அப்படியே பதிந்து விட்டது...

    அழகான ரங்கோலி கோலம் போட்டமைக்கு வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  4. பின்னிடீங்க பாஸ்

    ReplyDelete
  5. vaasakar manathilum kolam pottirukkum kathai. vaalthtukkal

    ReplyDelete
  6. ஒரு பக்க கதைக்கான அனைத்து இலக்கணத்துடன் இந்த கதை..

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "