முகம் தெரியாத முதியோர் கூட்டத்தில்
பத்தோடு பதினொன்றாய் இருந்து கொண்டு
பாசமாக இருப்பது போல் பேசி சிரித்து
பாசாங்கு செய்ய எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்ததெல்லாம் என்னை
தன் அன்பால் குளிப்பாட்டிய
உன் அப்பாவும் அவர் மறைவுக்குப் பின்
நீயும் உன் குழந்தைகளும் தானேடா!
பெற்று வளர்த்து ஆளாக்கி உனக்கோர்
திசையைக் காட்டிய எனக்கு நீ காட்ட வேண்டுமா
முதியோர் இல்லத்துக்கான திசை?
அங்கே போனாலும் இந்தப் பாழும் மனசு
உன்னைத்தானேடா நினைத்திருக்கும்!
வீட்டு வேலைகளை தலையில் கட்டி
மனைவி என்னை சக்கையாக பிழிவதால்தான்
என்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதாய்
நண்பனிடம் நீ போனில் பேசினதை
தற்செயலாய்க் கேட்ட போது
கருவறையில் உன்னை பத்து மாதம் சுமந்த எனக்கு
உன் மன அறையில் இடம் இருப்பது அறிந்து
மகிழ்ச்சிதான்.
அந்த நினைவுகளுடனே
அங்கே வாழ்ந்து முடிப்பேன் என் ஆயுளை!
வரட்டுமா என் ராசா?
-- ரேகா ராகவன்.
நல்ல கவிதை. இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருவதை பார்க்கும்போது பயமாக இருக்கிறது.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
புது தில்லி.
அங்கே போனாலும் இந்தப் பாழும் மனசு உன்னைத்தானேடா நினைத்திருக்கும்!
ReplyDeleteதாய் மனதை இதை விட நச்சென்று சொல்ல முடியாது..
அந்த நிலையிலும் வாழ்த்த அவளால் மட்டுமே முடியும்!
"வீட்டு வேலைகளை தலையில் கட்டி
ReplyDeleteமனைவி என்னை சக்கையாக பிழிவதால்"
நெஞ்சம் நெகிழ்கிறது
ரொம்ப நெகிழ்ச்சியான வரிகள். அருமை.
ReplyDelete