என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, August 26, 2009

திடம் (சிறுகதை)

"மூணாவதும் பெண்ணா? கள்ளிப்பால் கொடுக்கற குருவம்மாவுக்கு சொல்லிவிட்ர வேண்டியதுதான்."

டவுன் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை வந்து பார்த்துவிட்டு மாமியார்க்காரி சொல்லிவிட்டுப் போனது செல்லம்மாவின் காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது .

பாவி கட்டின புருஷனும் இல்லே இதுக்கு தலையாட்டறான்.

நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது அவளுக்குள் .
டிஸ்சார்ஜ் ஆகி புருஷனுடன் கிராமத்துக்கு திரும்ப பஸ் ஸ்டாண்டில் நின்றபோது...

ஒரு கடையின் ஓரத்திலிருந்த வண்ண மீன்கள் கண்ணாடித் தொட்டியை கவனித்தாள்.

தன் குட்டிகளுக்கு பின்னால் வாயைத்திறந்துகொண்டே நீந்திக்கொண்டிருந்தது அந்த ஜிலேபி கெண்டை மீன். கெளுத்தி மீன் ஒன்று குட்டிகளை விழுங்க வர, என்ன ஆச்சரியம்! அத்தனை குட்டிகளும் தாயின் வாய்க்குள் புகுந்து கொள்ள டப்பென்று வாயை மூடிவிட்டு ஆபத்து நீங்கியதும் வாயைத் திறக்க குட்டிகள் வெளியேறி மீண்டும் நீந்தத் தொடங்கின.

" சே! ஐந்தறிவுள்ள மீனே தன் குட்டிகளை காப்பாத்திக்க வழிகளை தெரிஞ்சு வச்சிருக்கச்சே ஆறறிவுள்ள தன்னால் குழந்தைகளை காப்பாத்த முடியாதா ?"

புருஷனிடம் சொன்னாள் உறுதியாக. "யோவ் இந்தக் குழந்தையை கொல்லாம வச்சுக் காப்பாத்துவேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் உன்னோட பஸ்ல வருவேன். இல்லாட்டி என் ஊருக்கு போய்க்கிறேன். ஊர்ல இருக்கற மத்த ரெண்டு பொட்டப் புள்ளைங்களையும் கூட என்னிடமே கொண்டு வந்து விட்டுடு. எப்பாடு பட்டாவது காப்பாதிக்கறேன்."










10 comments:

  1. ஆறறிவை அசர வைத்தது மீனின் ஐந்தறிவு! இ மீன் இட்!
    -- கே.பி. ஜனார்த்தனன்

    ReplyDelete
  2. // இ மீன் இட்! //
    கே.பி. ஜனார்த்தனன்.

    நன்றி வருகைக்கும் அசத்தலான கருத்துக்கும்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  3. சிறுகச் சொல்லிப் பெரிதாகப் புரிய வைக்கிற கதைகளைப் படைக்கும் விதம் அருமை. தொடர்ந்து எழுதிச் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    என்.கணேசன்

    ReplyDelete
  4. உங்களின் இந்தக் கதையை நான் புத்தகத்திலேயே படித்திருக்கிறேன். குமுதத்திலா, குங்குமத்திலா, கல்கியிலா என்பது நினைவில்லை. கதை அருமை!

    ReplyDelete
  5. சார், ஐ மீன், ஐ மீன் இட்! ( இ மீன் இட் என்று பிழையாக வந்து விட்டது என் பின்னூட்டத்தில்.) -- கே.பி. ஜனார்த்தனன்

    ReplyDelete
  6. //ரவிபிரகாஷ் //

    கதையை பாராட்டியமைக்கு நன்றி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  7. //என்.கணேசன்//

    பாராட்டுக்கு நன்றி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  8. ஐயா,
    நண்பர்களுக்கு ,வணக்கம். புதிதாக வந்துள்ளேன் ஆரம்பமும்,
    வந்தள், பெருக்கினள்,சென்றள் முதல் பதிவும்,
    திடம் (சிறுகதை)இரண்டாவது பதிவும்,
    இது போன்று பல்லாயிரம் பதிவுகள் படைத்திட வாழ்த்த வயதில்லை என்றாலும், இறைவனிடம் வேண்டுகிறேன்.
    மென்மேலும் தங்கள் பதவுகள்
    வளர்பிறையாய் வளரட்டும்.....
    என்றும் நட்புடன்...
    பிரவின்குமார்.

    ReplyDelete
  9. //பிரவின்குமார்.//

    நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "