என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 25, 2009

வந்தள், பெருக்கினள்,சென்றள்

நான் அப்போது தணிக்கைப் பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். கோவையில் உள்ள அலுவலகத்துக்கு தணிக்கைக்காக சென்றிருந்தேன். பதிவேடுகளை ஆய்வு செய்துகொண்டிருந்த போது ஒரு பதிவேட்டில் அன்றைய தேதியை போட்டு " வந்தள்,பெருக்கினள்,சென்றள் " என்று எழுதி ஒரு சுருக்கொப்பமும் (Initial) இடப்பட்டிருந்தது. இதில் கொடுமை என்னவென்றால் வருடம் பூராவுக்கும் இதையே எழுதி இருந்ததுதான். அங்குள்ள பணியாளரை அழைத்து " இது என்ன சார் ஒன்றும் புரியவில்லையே ?" என்று கேட்டதுக்கு "அதுவா சார் , தினமும் அலுவலகம் கூட்ட வரும் பெருக்குபவர் (பெண்) வந்தாரா என்பதை அறிந்து கொள்ள ஒரு வருகைப் பதிவேடு தனியாக வைத்துள்ளோம் . அதில்" வந்தாள் , பெருக்கினாள்,சென்றாள் " என்பதைத்தான் எங்கள் அலுவலக வாட்ச்மேன் "வந்தள்,பெருக்கினள்,சென்றள் " என்று எழுதி இருக்கிறார் என்றார். நீங்களாவது எழுதிக்காட்டி இருக்கலாமே என்றதுக்கு , "நீ காலை வாங்கலைன்னா உன் கையை வாங்கிடுவேன்னு பயமுறுத்திக்கூடப் பார்த்துட்டேன் சார், அவரை திருத்தவே முடியலை " என்றார். இதைக் கேட்டதும் எனக்கு மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி சொல்லும் "வந்தார், பார்த்தார் ,வென்றார் " (He came, He saw, He conquered) என்னும் வார்த்தைதான் நினைவுக்கு வந்தது.

7 comments:

  1. படித்தன்; ரசித்தன், சிரித்தன்.
    K.B.Janarthanan

    ReplyDelete
  2. ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் - நான்கூட ‘பெருக்கினள்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் பழங்காலப் பாடலோ என்று நினைத்துவிட்டேன் :)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  3. இந்த மாதிரி சின்னச் சின்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நம் வாழ்வில் நிறைய இருக்கின்றன. உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள் ஸார்.

    ReplyDelete
  4. @ சித்ரன்

    நன்றி வருகைக்கும் ஆலோசனைக்கும்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல இருக்கு அப்படியே சிரிப்பும் வருது.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "