Showing posts with label குமுதம். Show all posts

Wednesday, December 28, 2016
Thursday, November 15, 2012
Tuesday, October 5, 2010
திட்டு
"ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்குத் தலையெழுத்தா என்ன?"
அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.
நடந்தது இதுதான்.
இரவுக்குள் முடித்து ஆபீஸுக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன். ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி, இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்திரவு கொடுத்தார். அவரிடம் எரிந்து விழுந்தேன்.
"அவனோட சின்ன வயசிலே அப்படி இப்படின்னு சந்தேகம் கேட்கறச்சே சலிக்காம எத்தனையோ விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கேன். இப்ப எனக்கு வயசாகிடுச்சுல்ல, ஞாபகசக்தி குறைஞ்சிகிட்டு வருது, விடு கமலா"ன்னு அம்மாவிடம் அப்பா சொல்லவும் இந்த வயசிலும் கத்துக்கறதில் ஆர்வத்தோடு இருக்கற அப்பாவிடம் இனி இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று மனசுக்கு கட்டளையிட்டேன்.
(15.4.2009 " குமுதம் " இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

Saturday, December 5, 2009
நகம்
"பிரமிளா, இன்னிக்காவது விரல் நகங்களை வெட்டுடீ பெண் பார்க்க வர்றவன் உன்னைப் பிடிக்கலேன்னு சொல்லிடப் போறான்" என்றாள் அம்மா.அப்பா அம்மா பேச்சைத் தட்டமுடியாததால் பியூட்டி பார்லருக்கு போனவள் நகங்களை ஓட்ட வெட்டிக் கொண்டுவிட்டாள்.
பெரியவர்களை நமஸ்கரித்து எல்லோருக்கும் காபி கொடுத்து அமர்ந்தாள் பிரமிளா. ஆசையோடு அவள் கைகளைப் பற்றிப் பார்த்த பையனின் அம்மா முகத்தில் அதிர்ச்சி.
"என்னங்க இது? உங்க பொண்ணு கை விரல்களில் அழகா நகம் வளர்த்து வச்சிருக்கிறதா புரோக்கர் சொன்னாரே! பார்த்தா அப்படி இல்லியே! பொண்ணு வேலைக்குப் போறதாலே சிட்டி பஸ்ல சில்மிஷம் பண்றவங்க, இப்படி நகம் வளர்த்து வச்சிருக்கிறவங்ககிட்ட வர பயப்படுவானுங்களே நல்ல பாதுகாப்பான ஜாக்கிரதையான பொண்ணுன்னு உங்க பெண்ணைப் பார்க்க வர்றதா ஒப்புக்கிட்டோம். இங்கே என்னடான்னா"... என்று அவர் சொல்லி முடிக்க்கவும் வருத்தம் கலந்த பார்வையை அம்மாவை நோக்கி வீசினாள் பிரமிளா.
--ரேகா ராகவன்--
( "குமுதம்" 17.5.2006 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை. )
Wednesday, November 25, 2009
பாசிடிவ்
மெடிகல் ரெப் வேலைக்கான இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.கடைகளில் கணக்கெழுதிச் சம்பாதிக்கும் அப்பா, நோயாளி அம்மா, கல்யாணத்துக்காக காத்திருக்கும் தங்கை என்று ஒவ்வொருவராய் நினைவில் வந்து போக... தன்னுடைய முறைக்காக காத்திருந்தான் குமார்.
இண்டர்வியூ முடிந்து வெளியே வந்தவர்கள் ' சம்பந்தமில்லாம கேள்விகேட்கிறாங்கப்பா ' என்று முணுமுணுத்தார்கள்.
ஜி.எம்.கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் குமார் உடனுக்குடன் பதிலைக் கூற... அவர் அவனிடம்...
"மிஸ்டர் குமார்! இண்டர்வியூவுக்கு வந்திருந்த எல்லோரும் சர்ட்டிபிகேட் மட்டும்தான் கொண்டு வந்திருந்தாங்க. நீங்க மட்டும்தான் எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும்கற தன்னம்பிக்கையில் மத்தியான சாப்பாட்டைக் கூட கையோடு கொண்டு வந்திருக்கீங்க! வெரி பாசிடிவ். இந்த மாதிரி தன்னம்பிக்கை உள்ளவங்களாலதான் எங்க கம்பெனி தயாரிக்கும் மருந்துகளை டாக்டர்களிடம் பேசி மார்க்கெட்டிங் செய்ய முடியும் ".
( 3.12.2008 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)
Friday, October 30, 2009
இண்டர்வியூ!

ராஜ் அண்ட் கோ கம்பெனியில் காலியாக இருந்த ஒரு டைப்பிஸ்ட் பதவிக்கு பத்து பேர் இண்டர்வியூவுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பிளஸ் 2 முடித்ததும் மேலே படிக்க வசதியில்லாததால் டைப்ரைட்டிங் படித்து பாஸ் செய்த கையோடு அப்ளிகேஷன் போட்டிருந்த ஹரியும் ஒருவன்.
எம்.டி. ரூமுக்கு வெளியே ஆறாவது ஆளாக உட்கார்ந்திருந்த ஹரி இன்டர்வியூ முடித்து வெளியே வருபவர்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். மூன்றாவதாக வந்தவன் "மூணு கேள்வி கேட்டார், பதில் சொன்னேன். பிறகு பேப்பரை கொடுத்து ஒரு லெட்டர் டைப் செய்து தரச் சொன்னார். டைப் அடிச்சா பேப்பரில் ஒண்ணுமே தெரியலை. அந்த நிமிஷம் பார்த்துட்டு அனுப்பிட்டார்" என்றான் அழாத குறையாக.
ஐந்தாவதாக வந்தவனும் அதையே சொல்லிட்டு "ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் எப்படி சார் டைப் அடிக்க முடியும்னு கேட்டேன், வெளியே போகலாம்னு கையால காண்பிச்சார், வந்துட்டேன் " என்று டைப்ரைட்டரில் ரிப்பன் இல்லாத புது தகவலைச் சொல்லிட்டுப் போனான்.
இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தான் ஹரி.
அவனுடைய முறை வந்து உள்ளே அழைக்கப்பட்டான், அவனையும் ஒரு கடிதம் டைப் செய்து தரச் சொன்னார் எம்.டி.
ஹரி டைப் செய்து கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கச் சொன்ன எம்.டி.யை வியப்புடன் பார்த்தார் மேனேஜர்.
"இவன் மட்டும் எப்படி ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் கடிதத்தை டைப் செய்தான்னு தானே பார்க்கறீங்க? இவனுக்கும் எல்லோரையும் போலவே இரண்டு பேப்பர் மட்டுமே கொடுத்தேன். டைப்ரைட்டருக்குப் பக்கத்தில் வச்சிருந்த கார்பனை பேப்பர்களுக்கு நடுவில் வச்சு டைப் அடிச்சிருக்கான். மேலே இருக்கற பேப்பரில் ஒன்னும் தெரியாதுன்னாலும் கார்பனுக்கு கீழே இருந்த பேப்பரில் டைப் அழகா பதிஞ்சு கடிதத்தை ரெடி பண்ணிட்டான். இவனை மாதிரி சமயோசிதமா நடந்துக்கறவங்களால்தான் எந்த இடையூறுகளையும் சமாளிக்க முடியும்" என்றார் எம்.டி சிரித்துக்கொண்டே.
( குமுதம் 5.2.98 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
உங்கள் கைகளுக்கு வேலை கொடுங்கள். நிச்சயம் வயிற்றுப் பசியை ஆற்றும்

Tuesday, October 20, 2009
மறுபக்கம்
" இந்திரா நீ இன்னும் ரெடியாகலியா? நேரம் ஆயிட்டிருக்கு சீக்கிரம் கிளம்பு, கோயில்ல எல்லோரும் காத்துக்கிட்டிருக்காங்க. உன்னை அழைச்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன்"... அவசரப்படுத்தினான் மகேஷ்.கோயிலில் அலங்காரம் முடிந்து கல்யாணப் பெண்ணாக மாறியிருந்த இந்திரா சுவாமி சன்னதியின் எதிரே மணமகனுடன் நின்ற போது தரிசனத்துக்காக வந்திருந்த அனைவரின் கண்களும் இருவரையும் மொய்த்தன. இந்திராவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதை 'மறுபக்கம்' சீரியலுக்காக பல கோணங்களில் பதிவு செய்தார் வீடியோ கேமராமேன். எல்லா ஷாட்டும் முடிந்து பேக்கப் சொன்னதும் இந்திராவை ஆட்டோவில் ஏற்றி ... அவள் கையில் பணத்தை திணித்தான் மகேஷ்.
"உன்னோட கவலை எனக்குப் புரியுது இந்திரா. நடிக்க நீ சான்ஸ் தேடி அலைஞ்சப்பல்லாம் விதவைப் பெண் வேஷம். போன மாசம் உன் கணவர் இறந்த நிலையில் சர்வ அலங்காரத்தோட இன்று மணப்பெண் வேஷம். இன்னிக்கு கிடைச்ச பணம் குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு சரியா இருக்கும். நாளைக்கு இதே சீனோட கன்டினியூட்டி இருக்கு, ஆட்டோ பிடிச்சு வந்துடு."
அவளின் அழுகைச் சத்தம் ஆட்டோ சத்தத்தில் கரைந்து போனது.
(27.7.05 இதழ் குமுதத்தில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
Wednesday, September 30, 2009
உபதேசம் (சிறுகதை)
மனைவியிடம் கோபமாய் மறுத்தார் வாத்தியார் வேதாசலம்.
"வாஷிங்மெஷினா? திடீர்னு பத்தாயிரத்துக்கு எங்கே போறது? உன் புருஷன் ஒண்ணும் கை நிறைய சம்பளம் வாங்கற கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் இல்லை. அதெல்லாம் இப்ப வாங்க முடியாது."
"வர வர என்னால துணியே தோய்க்க முடியலைங்க...கையெல்லாம் வலிக்குது. வாசுகி வீட்ல கூட தவணை முறையில் வாங்கிட்டாங்க. அதுக்குக்கூடவா உங்களால முடியாது? எப்பப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டு பாடறீங்களே"...கோபமாய் பொரிந்தாள் மனைவி அகிலா.
"இதோ பார்... எப்பவும் மேலே இருக்கிறவங்களைப் பார்த்து பொருமிக்கிட்டிருக்காதே! நம்மளை விட கீழே இருக்கிறவங்களை கொஞ்சம் நினைச்சுப் பாரு! குடிசையிலும் பிளாட்பாரத்திலும் ஒரு வேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாம எத்தனை பேர் வாழறாங்க. நமக்காவது சொந்தத்தில் ஒட்டு வீடு இருக்கு. அதை நினைச்சு ஆறுதல் பட்டுக்கோ. வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ்ன்னு வீணா ஆசையை வளர்த்துக்காதே!" என்று மனைவியின் வாயை அடைக்கவும் வாசலில் "சார்" என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
டியூசனுக்கு வந்த இரண்டு பையன்களையும் முன் அறையில் உட்கார வைத்தார் வேதாசலம்.
"என்னடா பாலு ...டெஸ்ட் பேப்பர் தந்துட்டாங்களா? கணக்கில் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கே?"
தயக்கத்துடன் பேப்பரை நீட்டினான் பாபு. " அறுபத்தோரு மார்க் சார்."
"என்னடா இவ்வளவு குறைச்சலா வாங்கியிருக்கே! தொண்டைத் தண்ணீர் வறண்டு போற அளவுக்கு தினமும் உங்களுக்கெல்லாம் சொல்லித் தர்றேன். அட்லீஸ்ட் தொண்ணூறு மார்க்காவது வாங்க வேண்டாமா?"
"கிளாஸ்ல நிறையைப் பேர் நாற்பதை தாண்டலை சார்."
"எப்பவும் கீழே பார்க்காதேடா, மேலேதான் பார்க்கணும். உனக்கு மேலே எத்தனை பேர் அதிகமா மார்க் வாங்கியிருக்காங்க. அவர்களை விட அதிகமா மார்க் வாங்கிக்காட்டணும்னு மனசுல ஒரு வெறி இருக்கணும். அப்போதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். புரிஞ்சுதா?"
நிமிர்ந்த வேதாசலத்தின் பார்வை கதவுக்கருகில் சென்றது . அங்கே உஷ்ணப் பார்வையை வீசியபடி நின்றிருந்த அகிலாவைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் கத்தி இறங்கியது மாதிரி சட்டென்று ஒரு குற்ற உணர்ச்சி.
"எப்பாடு பட்டாவது அடுத்த மாதத்திற்குள் அகிலாவுக்கு வாஷிங் மெஷின் வாங்கித் தந்துடணும்" ... தீர்மானித்தார் வேதாசலம்.

( 25.5.2000 " குமுதம் " இதழில் வெளியான எனது சிறுகதை )
( ரேகா ராகவன் )
Subscribe to:
Posts (Atom)